ADDED : மார் 29, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவ விழாவில், தெப்பத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
19ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கடந்த, 19ம் தேதி துவங்கியது. சிம்ம வாகனம், முத்துப்பந்தல், அனுமந்த வாகனம், கருட வாகனம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகனம், திருத்தேரில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று முன் தினம் மாலை, சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். இரவு தெப்பத்தேர் உற்சவம் நடந்தது.
நேற்று பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி, சாற்றுமுறை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.

