/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூளைச்சாவு அடைந்த நபர் உடல் உறுப்புகள் தானம்
/
மூளைச்சாவு அடைந்த நபர் உடல் உறுப்புகள் தானம்
ADDED : செப் 17, 2024 11:25 PM

கோவை : மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால், ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கடந்துாரை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா, 27; தனியார் வாகன விற்பனை நிலைய ஊழியர். கடந்த, 15ம் தேதி தனது நண்பருடன் பைக்கில் செல்லும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு, மூளைச்சாவு ஏற்பட்டது.
அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, உறவினர்கள் முன்வந்தனர். உறுப்புகள் பிரித்தெடுக்கும் அறுவை சிகிச்சையை, அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர்.
தானமாக பெறப்பட்ட ஒரு சிறுநீரகம், கண் விழிகள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கும், இதயம், கல்லீரல் ஆகியவை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டன.