/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் விழிப்புணர்வு
/
இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் விழிப்புணர்வு
ADDED : ஆக 13, 2024 01:05 AM

கோவை;ராவ் மருத்துவமனை, ரோட்டரி கிளப் மோனார்க்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆக்ருதி சார்பில், தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆர்.எஸ்.புரம் ராவ் மருத்துவமனை வளாகத்தில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3201 கவர்னர் சுந்தரவடிவேலு மற்றும்முருகாம்பாள் பங்கேற்றனர்.
ராவ் மருத்துவமனையின் குழந்தை மருத்துவம் மற்றும் நியோனாட்டாலஜிஸ்ட் ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணசாமி, தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து பேசினார்.
சான்றளிக்கப்பட்ட பாலுாட்டுதல் ஆலோசகர்காவியா கிரிதரன், சிறந்த தாய்ப்பால் நடைமுறைகள் பற்றிய நுட்பங்களை,பகிர்ந்து கொண்டார்.
ராவ் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆஷா ராவ் பேசுகையில், ''தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய, சிறந்த புரிதலை உருவாக்குவதே, இந்நிகழ்ச்சியின் நோக்கம். தாய்ப்பால் ஊட்டமளிப்பதை விட, தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான உணர்வு பூர்வமான ஒரு பந்தத்தை உருவாக்குகிறது,'' என்றார்.

