/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பளிச்சென மாறும் பாலங்கள்; நீர்வழிப்பாதைகள் சீரமைப்பு
/
பளிச்சென மாறும் பாலங்கள்; நீர்வழிப்பாதைகள் சீரமைப்பு
பளிச்சென மாறும் பாலங்கள்; நீர்வழிப்பாதைகள் சீரமைப்பு
பளிச்சென மாறும் பாலங்கள்; நீர்வழிப்பாதைகள் சீரமைப்பு
ADDED : செப் 04, 2024 11:20 PM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலைத்துறை பாலங்கள், வெள்ளை வர்ணம் பூசப்பட்டு பளிச்சென மாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டம் கிணத்துக்கடவு நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்துக்கு உட்பட்ட, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை பிரிவுகளுக்கு உட்பட்ட பாலங்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பணியை கிணத்துக்கடவு உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன் பார்வையிட்டார்.
அதிகாரிகள் கூறுகையில், 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து ரோடுகளில் உள்ள பெரிய, சிறிய பாலங்கள், தரைப்பாலங்கள், குழாய் பாலங்கள் ஆகியவற்றில் உள்ள அடைப்புகள், தடுப்புகள், செடி கொடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தண்ணீர் தடையின்றி செல்ல இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அனைத்து பாலங்களும் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு பளிச்சென மாற்றப்பட்டுள்ளது. பாலங்களில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். நீர்வழிப்பாதைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும்,' என்றனர்.