ADDED : மார் 23, 2024 01:53 AM

அ நிறம் | அளவு
கோவை;கோவை விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகரில் அமைந்துள்ள, செல்வ விநாயகர் கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடந்தது.
நேற்று மாலை பிரதோஷ வேளையில், நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், சொர்ணாம்பிகை சமேத பிருந்தாவனேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷே க ஆராதனைகள் நடந்தன.
பிரதோஷ நாயகர் உற்சவராக எழுந்தருளி, பக்தர்கள் சூழ கோவிலை வலம் வந்தார். நந்தியம்பெருமான் மற்றும் சொர்ணாம்பிகை சமேத பிருந்தாவனேஸ்வரர், சிறப்பு அலங்காரத்தில் திருக்காட்சியளித்தனர்.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
