/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் கொள்ளை
ADDED : ஏப் 26, 2024 12:55 AM
கோவை;சுற்றுலா சென்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, வைரம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை நஞ்சுண்டாபுரம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் அன்பரசன், 46; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்து சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு மூணாறுக்கு சுற்றுலா சென்றார்.
அப்போது அவரது எதிர் வீட்டை சேர்ந்த ஒருவர், அன்பரசனுக்கு போன் செய்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
உடனே அவர் வீடு திரும்பினார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த, 11 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருட்டு போயிருந்தது தெரிந்தது. இதையடுத்து அன்பரசன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

