ADDED : மார் 28, 2024 05:30 AM

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் பிரிவில் சர்வீஸ் ரோட்டோரத்தில் டிவைடர்கள் உடைந்து உருக்குலைந்து குப்பை போன்று போடப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, கல்லாங்காட்டுபுதுார் முதல் அரசம்பாளையம் பிரிவு வரை, மேம்பாலம் கட்டப்பட்டது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் முக்கிய இடங்களில் விபத்தை தடுக்க ஆங்காங்கே டிவைடர்கள் வைக்கப்பட்டிருந்தது.
மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள முக்கிய இடங்களில், போக்குவரத்து நெரிசலாகும் இடம் மற்றும் விபத்து அபாயம் உள்ள இடங்களில் டிவைடர்கள் வைக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக, அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்த டிவைடர் அகற்றப்பட்டது.
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருக்கும் டிவைடர் சேதம் அடைத்தது. அதே டிவைடரையே புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வைத்துள்ளனர். இது, அவ்வப்போது காற்றுக்கு கீழே விழுவதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
சிங்கராம்பாளையம் பிரிவு சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில், உருக்குலைந்த டிவைடர் குப்பை போன்று போடப்பட்டுள்ளது. உடைந்த டிவைடரை முக்கிய பகுதியில் வைத்தும், பயன்படுத்தக்கூடிய டிவைடர் கிடப்பிலும் போடப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி முக்கிய இடங்களில் புதிய டிவைடர்கள் வைக்க வேண்டும்.
