ADDED : மே 15, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
கோவை: உ.பி.மாநிலம் நொய்டாவில் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்தும் கோவையில் பி.எஸ்.என்.எல்., ஊழியர், ஒப்பந்த ஊழியர், மற்றும் ஓய்வூதியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கம், மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
