/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுப்பு வீடு கட்டிக்கொடுங்க சார்! கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை
/
தொகுப்பு வீடு கட்டிக்கொடுங்க சார்! கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை
தொகுப்பு வீடு கட்டிக்கொடுங்க சார்! கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை
தொகுப்பு வீடு கட்டிக்கொடுங்க சார்! கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : பிப் 23, 2025 11:53 PM
வால்பாறை; வால்பாறையில், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரை சுற்றிலும், தேயிலை எஸ்டேட்கள் அதிகளவில் உள்ளன. பெரும்பாலான எஸ்டேட்கள் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, தேயிலை, மிளகு, காபி போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளன.
எஸ்டேட்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ள அரசு நிலங்களை மீண்டும் 'ரீ சர்வே' செய்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்டு, அந்த இடத்தில் தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில், தொகுப்பு வீடுகள் கட்டிதர வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து, வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில், வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வனவிலங்குகளின் அச்சுறுத்தலால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமலும், எஸ்டேட்களில் நிரந்தரமாக வசிக்க முடியாமலும் தவிக்கிறோம்.
எனவே, வால்பாறை நகரை சுற்றிலும், தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை மீட்டு, அந்த இடத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்.
மூன்று தலைமுறைகளாக எஸ்டேட்களில் பணிபுரியும் எங்களுக்கு, குடியிருக்க சொந்த வீடு கூட இல்லாத நிலையில், கூலி வேலை செய்து வருகிறோம். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி, தொகுப்பு வீடுகள் கட்டித்தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

