நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை - பழநி ரோட்டில் வெஞ்சமடையில் நிழற்கூரை இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோட்டில் சாலை விரிவாக்கப்பணியின் போது, வெஞ்சமடையில் இருந்த நிழற்கூரை அகற்றப்பட்டது. பணிகள் முடிந்த பின் மீண்டும் நிழற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால், அந்த பஸ் நிறுத்தத்தில் பயணியர் வெயிலிலும், மழையிலும் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு புதிதாக நிழற்கூரை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

