/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டும் குழியுமான சாலை; புதுப்பிக்க மக்கள் கோரிக்கை
/
குண்டும் குழியுமான சாலை; புதுப்பிக்க மக்கள் கோரிக்கை
குண்டும் குழியுமான சாலை; புதுப்பிக்க மக்கள் கோரிக்கை
குண்டும் குழியுமான சாலை; புதுப்பிக்க மக்கள் கோரிக்கை
ADDED : செப் 12, 2024 08:44 PM

பொள்ளாச்சி : கரட்டுப்பாளையம் - வீரல்பட்டி இடையிலான சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுவதால், அதனை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, கரட்டுப்பாளையம் முதல் வீரல்பட்டி இடையிலான சாலை, 7.7 கி.மீ., துாரம் உள்ளது. இந்த சாலை, சுற்றுப்பகுதி கிராமங்கள் மட்டுமின்றி, உடுமலை, பொள்ளாச்சி, வால்பாறை நகரங்களைச் சென்றடையும் வகையில் முக்கிய வழித்தடமாக உள்ளது.
ஆனால், இந்த சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர தேவைக்காக கிராம மக்கள் இவ்வழியே எளிதில் செல்ல முடியாமல் திணறுகின்றனர்.
கிராமங்களில் இருந்து, பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், விவசாயிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
மக்கள் கூறியதாவது:
இவ்வழித்தடத்தில் சில ஆண்டுகளுக்கு முன், தார் சாலை அமைக்கப்பட்டது. முறையாக பராமரிக்காததால், தற்போது சாலை முழுவதும் மோசமாக உள்ளது. மழை பெய்தால் பள்ளங்கள் இருப்பது தெரியாமல், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும், இவ்வழியே இயக்கப்படும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. வாகனங்களில், இரவு நேரங்களில் அவசர தேவைக்கு விரைந்து செல்ல முடிவதில்லை. புதிதாக சாலை அமைக்க கோரி புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒன்றிய அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு செய்து, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

