/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொளுத்துகிறது கோடை வெயில் துாய்மை பணியாளர் நேரம் மாற்றம்
/
கொளுத்துகிறது கோடை வெயில் துாய்மை பணியாளர் நேரம் மாற்றம்
கொளுத்துகிறது கோடை வெயில் துாய்மை பணியாளர் நேரம் மாற்றம்
கொளுத்துகிறது கோடை வெயில் துாய்மை பணியாளர் நேரம் மாற்றம்
ADDED : ஏப் 27, 2024 12:52 AM
கோவை;வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் காலை 6:00 முதல் மதியம், 12:00 மணி வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் நிரந்தரம், தற்காலிகம் என, 6,332 துாய்மை பணியாளர்கள், 795 கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர்.
துாய்மை பணியாளர்கள் காலை, 6:45 முதல் மதியம், 2:30 மணி வரை பணிகள் மேற்கொள்ளும் நிலையில் வெயிலின் தாக்கத்தால், பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். பணி நேரத்தில் தளர்வு ஏற்படுத்துமாறு, கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துாய்மை பணியாளர்கள், சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், கோவையிலும் வரும் நாட்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று செய்திகள் வந்துள்ளன.
குறிப்பாக, மதியம், 12:00 முதல் 3:00 மணி வரை பொது மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும், துாய்மை பணியாளர்கள் காலை 5:45 மணிக்கு வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு காலை, 6:00 முதல் மதியம், 12:00 மணி வரை பணியில் ஈடுபட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை, இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்' என, தெரிவித்துள்ளார்.

