/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெரிசலை தவிர்க்க 'பஸ் பே' அமைப்பு திட்டத்தை விரிவுபடுத்தணும்
/
நெரிசலை தவிர்க்க 'பஸ் பே' அமைப்பு திட்டத்தை விரிவுபடுத்தணும்
நெரிசலை தவிர்க்க 'பஸ் பே' அமைப்பு திட்டத்தை விரிவுபடுத்தணும்
நெரிசலை தவிர்க்க 'பஸ் பே' அமைப்பு திட்டத்தை விரிவுபடுத்தணும்
ADDED : ஜூன் 05, 2024 09:02 PM

உடுமலை: பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, டிவைடர் வைத்து, 'பஸ் பே' ஒதுக்கப்பட்டுள்ளது. நகரின் பிற இடங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
உடுமலை நகரில், பழைய பஸ் ஸ்டாண்ட், கொல்லம்பட்டரை, காந்திநகர் உள்ளிட்ட பஸ் ஸ்டாப்புகள் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. அதிக போக்குவரத்து உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பஸ்களை நிறுத்த இடமில்லை.
இதனால், பயணியரை இறக்கி, ஏற்ற, தேசிய நெடுஞ்சாலையிலேயே பஸ்கள் நிறுத்தப்படும். இதனால், பிற வாகனங்கள், நெடுஞ்சாலையில் செல்ல வழியில்லாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
பஸ்களை ஒட்டியே இருசக்கர வாகனங்களும் செல்வதால், பயணியரும், பதட்டத்துடன், ஏறி, இறங்குகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, பஸ்களை நிறுத்த தனியிடம் ஒதுக்க(பஸ் பே) வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது முதன்முறையாக, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பஸ்களை நிறுத்த, இடம் ஒதுக்கப்பட்டு, அவ்விடத்தில், போக்குவரத்து போலீசாரால், டிவைடர்களும் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், தளி ரோடு சிக்னலை தாண்டியதும், பஸ்களை நிறுத்துவதால், ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்படும் வாய்ப்புள்ளது. இதே போல், தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பிற பஸ் ஸ்டாப்புகளிலும், பஸ் பே ஏற்படுத்த வேண்டும்.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். பயணியரும் பதட்டமில்லாமல், பஸ்சில் ஏறவும் இறங்கவும் முடியும்.
மேலும், தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, தளி ரோட்டிலும் இந்த முறையை அமல்படுத்த போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.