/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் மீது பஸ் மோதல்; மேம்பாலத்தில் விபத்து
/
கார் மீது பஸ் மோதல்; மேம்பாலத்தில் விபத்து
ADDED : மே 12, 2024 11:36 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி மேம்பாலத்தில் கார் மீது தனியார் பஸ் மீது மோதி, விபத்துக்குள்ளானது.
பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (11ம் தேதி) கிணத்துக்கடவு அருகே உள்ள, முள்ளுப்பாடி பாலத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த பத்பநாபன்,43, என்பவர் குடும்பத்துடன் காரில் பொள்ளாச்சி நோக்கி சென்றார்.
அப்போது, பின் தொடர்ந்து வந்த தனியார் பஸ் திடீரென கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், கார் நிலை தடுமாறி மேம்பால தடுப்பில் மோதியதில், காரின் முன் பக்கம் இருந்த டயர் வெடித்தது.
கார் மற்றும் பஸ்சில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். விபத்து நடந்ததால், இந்த ரோட்டில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிணத்துக்கடவு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.