/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் பயணிகள் வெயிலில் அவதி: நிழல் கூரை அமைத்தால் நிம்மதி
/
பஸ் பயணிகள் வெயிலில் அவதி: நிழல் கூரை அமைத்தால் நிம்மதி
பஸ் பயணிகள் வெயிலில் அவதி: நிழல் கூரை அமைத்தால் நிம்மதி
பஸ் பயணிகள் வெயிலில் அவதி: நிழல் கூரை அமைத்தால் நிம்மதி
ADDED : ஏப் 21, 2024 09:50 PM

மேட்டுப்பாளையம்;திருப்பூர், ஈரோடு செல்லும் பயணிகள், வெய்யிலின் தாக்கத்தால் அவதிப்படுகின்றனர். அதனால் நகராட்சி நிர்வாகம் நிழல் கூரை அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டை இடித்து விட்டு, எட்டு கோடி ரூபாய் செலவில், புதிதாக கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.
முதல் கட்டமாக, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பஸ்கள் நிறுத்திய இடத்தில் உள்ள, கடைகளையும், பயணிகள் நிழல் கூரை கட்டடத்தையும் இடித்துள்ளனர். பணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், சுற்றியும் தகரத்தாள் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் வழக்கமான இடத்திலேயே, நிறுத்தப்பட்டுள்ளன. திருப்பூர், ஈரோடு, திருச்சி, தேனி செல்லும் பஸ்கள், கோவை பஸ்கள் நிறுத்திய இடத்தில் உள்ள, காலி இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆனால் அப்பகுதியில் பயணிகள் நிழல் கூரை இல்லாததால், பயணிகள் வெய்யிலில் நின்று அவதிப்படுகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்டின் ஓரத்தில் உள்ள காலி இடத்தில், பயணிகள் நிழல் கூரை அமைக்க வேண்டும்.
மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்து உள்ளது. அதனால் இரவில் இப்பகுதியில், பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்க பயப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, திருப்பூர், ஈரோடு, பஸ்கள் நிற்கும் இடத்தில், பயணிகள் நிழல் கூரையும், மின்விளக்குகள் வசதியும், நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என, பயணிகள் கூறினர்.

