/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக எல்லை கிராமத்துக்கு பஸ் சேவை; கோபாலபுரத்தில் இருந்து நீட்டிக்கணும்
/
தமிழக எல்லை கிராமத்துக்கு பஸ் சேவை; கோபாலபுரத்தில் இருந்து நீட்டிக்கணும்
தமிழக எல்லை கிராமத்துக்கு பஸ் சேவை; கோபாலபுரத்தில் இருந்து நீட்டிக்கணும்
தமிழக எல்லை கிராமத்துக்கு பஸ் சேவை; கோபாலபுரத்தில் இருந்து நீட்டிக்கணும்
ADDED : ஜூலை 25, 2024 10:39 PM
பொள்ளாச்சி : தமிழக - கேரள எல்லையொட்டிய கருமாண்டகவுண்டனுார் கிராமம் வரை, அரசு டவுன் பஸ் சேவையை நீட்டிக்க, கேரளா தமிழ் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே, தமிழக - கேரள மாநில எல்லையொட்டிய கோபாலபுரத்துக்கு, 6 அரசு டவுன் பஸ்கள் மற்றும் இரு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள், கிராமங்கள் வழியே இயக்கப்பட்டாலும், குறிப்பிட்ட நேரத்தில் கோபாலபுரத்தை சென்றடைகின்றன.
இதனால், இரு மாநில எல்லை கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன் பெறுகின்றனர். இந்நிலையில், கோபால புரம் வரை இயக்கப்படும் ஏதேனும் ஒரு டவுன் பஸ் சேவையை, கருமாண்டகவுண்டனுார் கிராமம் வரை நீட்டிக்கவோ, கோபாலபுரம் மற்றும் ஆர்.வி.,புதுார் இடையே மினிபஸ் சேவைக்கு அனுமதிக்கவோ வேண்டும் என, கேரள தமிழ் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, கேரள தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பேச்சிமுத்து கூறியதாவது: கோபாலபுரம் - ஆர்.வி., புதுார் இடையே, 7 கி.மீ., துாரம் வரை சாலை இருந்தும் பஸ் வசதி கிடையாது. இதனால், கருமாண்டகவுண்டனுார் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு ஆர்.வி.,புதுார் மற்றும் கோபாலபுரம் செல்ல சிரமப்படுகின்றனர்.
வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கின்றனர். முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றிய மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, கோபாலபுரம் வரை இயக்கப்படும் அரசு டவுன் பஸ் சேவையை, கருமாண்டகவுண்டனுார் வரை நீட்டிக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் மட்டுமின்றி அன்றாட பணிக்கு செல்வோர் பயனடைவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

