/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடுரோட்டில் திடீரென நிறுத்தப்படும் பஸ்கள்: 'அட்ராசிட்டி'யில் பஸ் ஊழியர்கள்
/
நடுரோட்டில் திடீரென நிறுத்தப்படும் பஸ்கள்: 'அட்ராசிட்டி'யில் பஸ் ஊழியர்கள்
நடுரோட்டில் திடீரென நிறுத்தப்படும் பஸ்கள்: 'அட்ராசிட்டி'யில் பஸ் ஊழியர்கள்
நடுரோட்டில் திடீரென நிறுத்தப்படும் பஸ்கள்: 'அட்ராசிட்டி'யில் பஸ் ஊழியர்கள்
ADDED : ஏப் 19, 2024 10:40 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, சுற்றுப்பகுதி வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள், 'ஸ்டாப்' ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர்த்து, நடுரோட்டில் பயணியரை ஏற்றி இறங்கச் செய்கின்றனர்.
பொள்ளாச்சியில் நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், வாகனங்களின் இயக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், விபத்து, நெரிசல் போன்றவற்றை தவிர்க்க, போக்குவரத்து போலீசாரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
ரோடு விரிவாக்கம் செய்தல், நெரிசலை கட்டுப்படுத்த சென்டர்மீடியன் அமைத்தல், 'டிராபிக்' சிக்னல் அமைத்தல், போலீஸ் கண்காணிப்பு என, பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டும் வருகின்றன.
இத்தனை முயற்சிகள் எடுத்தும், வாகன ஓட்டுநர்கள் முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் இருப்பதால் பாதிப்பு தொடர்கிறது. இது ஒருபுறமிருக்க, சுற்றுப்பகுதி வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஸ்டாப் ஒதுப்பட்ட இடத்தில் நிறுத்தப்படுவது கிடையாது.
அதற்கு மாறாக, நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி, பயணியரை ஏற்றியும், இறங்கச் செய்தும் பஸ் ஊழியர்கள், 'அட்ராசிட்டி'யில் ஈடுபடுகின்றனர்.
ஆழியாறு வழித்தடத்தில் பொள்ளாச்சி நோக்கி இயக்கப்படும் தனியார் பஸ், தங்கம், ஓம்பிரகாஷ், கோட்டூர் பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில், நடு ரோட்டிலேயே நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது.
இதனால், காலை நேரத்தில் அவசரகதியில் அலுவலகம் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக சென்ற பிற வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், பஸ்சில் இருந்து இறங்கிய பயணியர், வாகன விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'நடு ரோட்டில் பஸ்சை திடீரென நிறுத்தி பயணியரை ஏற்றுவதால், பின்னால் வேகமாக செல்லும் அனைத்து வாகனங்களும் வரிசை கட்டி நிற்க வேண்டியுள்ளது.
தங்களால் ஏற்படும் தேவையில்லாத இடையூறுகளை பற்றி டிரைவர்கள் கவலைப்படுவதில்லை. இத்தகைய பஸ் ஊழியர்களால், மெயின் ரோடுகளில் தேவையில்லாத நெருக்கடி ஏற்படுகிறது. போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

