/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளை பொருட்களை அடகு வைத்து ரூ. 5 லட்சம் வரை கடன்
/
விளை பொருட்களை அடகு வைத்து ரூ. 5 லட்சம் வரை கடன்
ADDED : ஜூலை 08, 2024 11:35 PM
சூலூர்;செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது, என, மேற்பார்வையாளர் தமிழரசன் கூறினார்.
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் தமிழரசன் கூறியதாவது:
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை, கொண்டை கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறலாம்.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 5 லட்சம் ரூபாய் அல்லது இருப்பு வைக்கப்படும் பொருட்களின் மதிப்பில், 50 சதவீதம் கடனாக வழங்கப்படும். இதற்கு ஆண்டுக்கு, 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
ஒரு பயனாளி, 120 நாட்கள் வரை, தங்களின் பொரருட்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக, 180 நாட்கள் வரை அனுமதிக்கப்படும். கடந்த ஏப்., முதல், தற்போது வரை, 14 விவசாயிகளுக்கு, 65 லட்சம் ரூபாய் பொருளீட்டு கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.