/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 12, 2024 10:57 PM
கோவை;துணிச்சல் மற்றும் வீரசாகச செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை
துணிவு மற்றும் வீரசாகசச் செயல்களுக்காக தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படுகிறது.
துணிச்சல் மற்றும் வீரசாகச செயல்புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.உரிய தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் விரிவான தன் விபரக் குறிப்பு, உரிய விபரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் 15 ம் தேதிக்குள் அதற்கான கருத்துருவை சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

