/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானியத்தில் தென்னங்கன்று விவசாயிகளுக்கு அழைப்பு
/
மானியத்தில் தென்னங்கன்று விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : செப் 04, 2024 01:30 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு மானியத்தில் தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க தோட்டக்கலை துறை சார்பில், 100 சதவீதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு நெட்டை ரக தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. தற்போது கிணத்துக்கடவு பகுதிக்கு, 20 ஹெக்டேர் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு, 175 தென்னங்கன்றுகள் வழங்கப்படும். விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்கு எற்ப தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.
மேலும், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் இத்திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, தென்னங்கன்று வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் தென்னங்கன்றுகள் பெற, சிட்டா, அடங்கல், பேங்க் பாஸ் புக், ரேஷன் மற்றும் ஆதார் நகல், 3 பாஸ்போர்ட் போட்டோ போன்ற ஆவணங்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை, கிணத்துக்கடவு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.