/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை, கொள்ளை தடுக்க ஒத்துழைப்பு சந்தேக நபர் குறித்து தெரிவிக்க அழைப்பு

ADDED : மார் 02, 2025 10:56 PM
அன்னுார், ; சந்தேக நபர்கள் குறித்து, தகவல் தெரிவிக்க, அன்னுார் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், விழிப்புணர்வு துண்டு பிரசுர வினியோகம் நடந்தது. அன்னூர் போலீசாரும், டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகளும், விழிப்புணர்வு பிரசுரங்களை பஸ் ஸ்டாண்ட், கடைவீதி பகுதிகளில் வினியோகித்தனர்.
'விலை உயர்ந்த நகைகள் மற்றும் அதிக பணத்தை வீட்டில் வைக்காமல் வங்கியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். அவசர காலத்தில், '100' எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். குடியிருப்பு பகுதி, தோட்டத்து வீடுகள், முதியவர்கள் குடியிருக்கும் வீடுகளில், 'சிசி டிவி' கேமராக்களை பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் வீட்டைச் சுற்றி மின்விளக்குகளை எரிய விட வேண்டும்.
வெளியூர் செல்லும் சமயங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர் கொலை, கொள்ளை நடக்காமல் இருக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
அன்னுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு 94981 01173 மற்றும் இன்ஸ்பெக்டருக்கு 94429 15654 மொபைல் எண்களில் தகவல் தெரிவிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.