/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உழவர் சந்தையில் கடை விவசாயிகளுக்கு அழைப்பு
/
உழவர் சந்தையில் கடை விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 24, 2024 11:46 PM
கோவை : ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விளை பொருட்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள விவசாயிகளுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் வாயிலாக செயல்பட்டு வரும், கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில், தங்கள் நிலத்தில் விளையும் விளைபொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு, கட்டணம் இன்றி விற்பனை செய்ய கடைகள், மின்னணு தராசுகள், குளிர்பதன கிடங்கு மற்றும் பஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.