ADDED : மே 01, 2024 11:33 PM

கோவை: கோவை நவக்கரையில் உள்ள, ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரியில், 'இளம் மாஸ்டர் செப்- 2024' என்ற, மூன்று நாள் பயிலரங்கம் நடக்கிறது.
கோவை ஏ.ஜே.கே., மற்றும் 'தினமலர்' நாளிதழ் இணைந்து வழங்கும், 'இளம் மாஸ்டர் செப்- 2024' பயிலரங்கம், வரும் 4 முதல் 6ம் தேதி வரை, கல்லுாரி அரங்கில் நடைபெறும்.
தினமும் காலையில், 9:30 முதல் மாலை 4:00 மணி வரை, வல்லுநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். இப்பயிற்சியில் மாணவர்கள் எளிதாக பங்கேற்கும் வகையில், காந்திபுரத்தில் இருந்து, காலை 8:30 மணிக்கு கல்லுாரி வரை பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிலரங்கில் மாணவர்களுக்கு, சூப், சாலடு, சைவ மற்றும் அசைவ உணவுகள், புலாவ், கேக்குகள், குக்கீஸ் வகைகள், மலர் அலங்காரம் மற்றும் மேஜை நாகரீகம் கற்றுத்தரப்படும்.
உணவியல் மற்றும் விடுதி மேலாண்மை படிப்பு படிப்பதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், ஸ்டார் உணவகங்களில் மாஸ்டர் செப் வாய்ப்பு விபரங்கள், தொழில்முனைவோர் வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.
பிளஸ்2 முடித்துள்ள மாணவர்கள், பள்ளி அடையாள அட்டையுடன் வந்து இலவசமாக பங்கேற்கலாம். பெயர் பதிவு, விபரங்களுக்கு, 63845-55511 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
