/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்போர்ட்ஸ் கோட்டா வீரர்களுக்கு அழைப்பு
/
ஸ்போர்ட்ஸ் கோட்டா வீரர்களுக்கு அழைப்பு
ADDED : மார் 29, 2024 12:48 AM
கோவை:இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், இந்தாண்டுக்கான விளையாட்டு வீரர்கள் சேர்க்கையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, பல்வேறு கல்லுாரிகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டா அடிப்படையில் தேர்வாகும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில், மாணவர்களின் சான்றிதழ்கள் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது.
அதன்படி, பிளஸ் 2 மற்றும் இளங்கலை முடித்த விளையாட்டு வீரர்களுக்கு, ஏப்., 4, 5, 6ம் தேதிகளில் சேர்க்கை நடக்கிறது. மாணவர்கள், மாவட்ட, மாநில மற்றும் தேசியளவிலான போட்டிகளில் பங்கேற்றதற்கான அசல் சான்றிதழை எடுத்துச் சென்று பங்கேற்கலாம். விபரங்களுக்கு: 99449 77885.

