/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணியூர் ஊராட்சியில் 11ல் முகாம்
/
கணியூர் ஊராட்சியில் 11ல் முகாம்
ADDED : ஜூலை 04, 2024 05:02 AM
கோவை : கோவை மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில், 'மக்களுடன் முதல்வர்' என்கிற திட்டம், 11ம் தேதி துவக்கப்படுகிறது. அன்றைய தினம், கணியூர் ஊராட்சி, ஊஞ்சப்பாளையம் கிராமம் இந்திரா நகர் எஸ்.என்.கே., மஹாலில் காலை, 10:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை முகாம் நடத்தப்படுகிறது.
வருவாய்த்துறை, மின்வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவு துறை, வீட்டு வசதித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண் துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட, 15 அரசு துறைகள் சார்ந்த சேவைகள் பெற, மனுக்கள் கொடுக்கலாம்.
கோரிக்கை தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் நகல்கள் கொண்டு வர வேண்டும. 50 சதவீத சலுகை கட்டணத்தில் இ-சேவை வசதி செய்து தரப்படும். மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வரும், 16ம் தேதி முதல் செப்., 14 வரை, 61 முகாம்கள் ஊரகப்பகுதிகளில் தொடர்ச்சியாக நடத்தப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்திருக்கிறார்.