/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் பயணியை பஸ்சில் ஏற்றாமல் செல்லலாமா?
/
பெண் பயணியை பஸ்சில் ஏற்றாமல் செல்லலாமா?
ADDED : ஜூலை 06, 2024 12:34 AM
கோவை;கோவை ரேஸ்கோர்சை சேர்ந்தவர் பிரேமா, திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை உக்கடத்திலிருந்து வந்த, 30 எப் பஸ்ஸில், சுங்கம் பஸ் நிறுத்தத்திலிருந்து ஏற முயற்சித்தார்.
அதற்குள் பஸ் வேகமாக சென்று விட்டது. அவரது கணவர் உதவியோடு, அடுத்த பஸ் நிறுத்தமான சிந்தாமணியில் பஸ் நின்றபோது, பஸ்சுக்கு முன்பாக, ஸ்கூட்டரில் சென்று பஸ்சை பிடித்தார். இது தொடர்பாக, பிரேமாவின் கணவருக்கும், டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த, அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட பொதுமேலாளர் கோவிந்தராஜன் கூறுகையில், ''புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொள்ளப்படும். தவறு உறுதி செய்யப்படும் பட்சத்தில், டிரைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
அரசு பஸ் டிரைவர்கள் கூறுகையில், 'பஸ்நிறுத்தத்தில் பயணிகள் இருந்தால், ஏற்றிக்கொள்வோம். பயணி ஸ்கூட்டரில் வருவது எங்களுக்கு தெரியுமா. பஸ்ஸின் குறுக்கே ஸ்கூட்டரை நிறுத்துவது தவறு. விதிமுறைகளின் படிதான் பஸ்சை இயக்குகிறோம்' என்றனர்.