/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுநோய் கண்டறிதல் இலவச முகாம்
/
புற்றுநோய் கண்டறிதல் இலவச முகாம்
ADDED : ஜூலை 17, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் கண்ணன் ஹோமியோபதி மெடிக்கல் சென்டர் மற்றும் ஜி.கே.என்.எம்.,மருத்துவமனை ஆகியன இணைந்து, மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் இலவச முகாமை நடத்தியது.
முகாமில், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்,பேரூராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ், 15வது வார்டு கவுன்சிலர் பாலகிருஷ்ணன், டாக்டர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.