/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டிக்கு புற்றுநோய்க்கட்டி அகற்றம்; அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை
/
மூதாட்டிக்கு புற்றுநோய்க்கட்டி அகற்றம்; அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை
மூதாட்டிக்கு புற்றுநோய்க்கட்டி அகற்றம்; அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை
மூதாட்டிக்கு புற்றுநோய்க்கட்டி அகற்றம்; அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை
ADDED : செப் 12, 2024 09:41 PM

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் அதிநவீன லேப்ராஸ்கோபி முறையில் மூதாட்டிக்கு, 7 மணி நேர அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய்க்கட்டி அகற்றப்பட்டது.
இதுகுறித்து டீன் நிர்மலா கூறியதாவது:
கோவையை சேர்ந்த, 60 வயது மூதாட்டி வயிற்று வலி மற்றும் ரத்தபோக்கு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில், புற்றுநோய் அறுவைசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எம்.ஆர்.ஐ., வயிற்று எஸ்கேன் உட்பட பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் அவருக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் உருவாகி, மூன்றாம் நிலைப் புற்றுநோயாக பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவருக்கு உடல் பருமன், 90 கிலோ. நுரையீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நான்கு வகையான பிரச்னைகளுடன் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்வதில் உயிருக்கு ஆபத்தான நிலை இருந்தது. இருப்பினும் அதிநவீன லேப்ராஸ்கோபி முறையில், 7 மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது புற்றுநோய்க்கட்டி முழுவதுமாக அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப்பின் அடுத்த நாளே உணவு உட்கொண்டு, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட் டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அவருக்கு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புற்றுநோய் சிகிச்சையை வெற்றிகரமான செய்து முடித்த புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர்கள் துறைத் தலைவர் டாக்டர் பாலமுருகன் மற்றும் டாக்டர்கள் செல்வராஜ், கணேஷ்குமார், செந்தில்குமார், மயக்கவியல் நிபுணர் கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோரை டீன் நிர்மலா பாராட்டினார்.