/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நீட்' முதுநிலைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பின் அனுமதி
/
'நீட்' முதுநிலைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பின் அனுமதி
'நீட்' முதுநிலைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பின் அனுமதி
'நீட்' முதுநிலைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பின் அனுமதி
ADDED : ஆக 12, 2024 01:49 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் நடந்த 'நீட்' முதுநிலை தேர்வை எழுத, 400 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 28 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.
சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை, 'நீட்' மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான நீட் தேர்வு, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வாயிலாக நடத்தப்படுகிறது.
அவ்வகையில், நேற்று 'நீட்' முதுநிலை தேர்வு நடத்தப்பட்டது. பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கல்லுாரியில் மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இரு பிரிவுகளாக தேர்வு, நடத்தப்பட்டது.
அதன்படி, காலை, 9:00 முதல் 12:30 மணி தேர்வு எழுத 200 பேரும் மாலை, 3:30 முதல் 7:00 மணி வரை, தேர்வு எழுத 200 பேர் வீதம் மொத்தம் 400 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், காலையில் நடந்த தேர்வில், 20 பேர், மாலையில் நடந்த தேர்வில், 8 பேர் என, மொத்தம், 28 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.
இந்த தேர்வை எம்.பி.பி.எஸ்., முடித்த டாக்டர்கள் பலர் எழுதிய நிலையில், முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அவ்வகையில், ஹால்டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, என்.எம்.சி., பதிவு நகல் ஆகியவற்றை மட்டும் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, ஒரு மணி நேரத்திற்கு முன்னரே மையத்திற்குள் செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தீவிர சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

