ADDED : மே 10, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
கோவை: மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கோவை ரயில்வே ஸ்டேஷனில் சோதனையில் ஈடுபட்டனர்.
பாட்னா– எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனையின் போது, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த, இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மறைத்து வைத்திருந்த, 1.100 கிலோ கஞ்சா மற்றும் 1.200 கிலோ கஞ்சா சாக்லேட், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த விகாஷ்குமார், 26, சந்தோஷ்குமார் முகியா, 22 ஆகியோரை கைது செய்தனர்.
