ADDED : ஜூலை 03, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
ஆத்துபாலம்: கரும்புக்கடை போலீசார் புட்டுவிக்கி சாலையில் ரோந்து சென்றார். அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே புதர் பகுதியில் இருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர்.
விசாரணையில் அவர்கள் சுந்தராபுரம் அன்னை இந்திரா நகர் காஜா ஹுசேன், 26, கரும்புக்கடை, ஆசாத் நகர் அப்பாஸ், 30 என்பதும் விற்பனைக்காக இருவரும், 1.2 கி. கிராம் கஞ்சா, போதைக்கு பயன்படுத்தும் டெபன்டடால் மாத்திரைகள், 51 வைத்திருப்பதும் தெரிந்தது. கஞ்சா, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
