/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈ தொல்லை தாங்க முடியல! கஞ்சப்பள்ளி மக்கள் கதறல்
/
ஈ தொல்லை தாங்க முடியல! கஞ்சப்பள்ளி மக்கள் கதறல்
ADDED : ஜூலை 25, 2024 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார் : 'கோழி பண்ணைகளில் உருவாகும் ஈக்களால் சாப்பிட முடியவில்லை' என, புகார் எழுந்துள்ளது.
கஞ்சப்பள்ளி பொதுமக்கள் கூறுகையில்,'கஞ்சப்பள்ளி அருகே கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளால் ஆயிரக்கணக்கில் ஈக்கள் உருவாகின்றன. இவை வீடுகளில் புகுந்து, உணவு பண்டங்கள் மீதும், தண்ணீரிலும் விழுந்து விடுகின்றன.
கஞ்சப்பள்ளி ஊராட்சி அலுவலகத்திலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும், புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. ஈக்களை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.