/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சுற்றுச்சூழலை பாதுகாக்க கார்பன் குறைக்க வேண்டும்'
/
'சுற்றுச்சூழலை பாதுகாக்க கார்பன் குறைக்க வேண்டும்'
'சுற்றுச்சூழலை பாதுகாக்க கார்பன் குறைக்க வேண்டும்'
'சுற்றுச்சூழலை பாதுகாக்க கார்பன் குறைக்க வேண்டும்'
ADDED : செப் 03, 2024 01:40 AM

கோவை;கோவை எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்ட் பள்ளியில், 'டிரான்ஸ்பார்மிங் இந்தியா கான்க்ளேவ்-2024' நேற்று முன்தினம் துவங்கியது; இன்று நிறைவடைகிறது.
இரண்டாவது நாளான நேற்று, அமெரிக்காவில் உள்ள ஆல்மா கல்லுாரியின் தலைமை செயல் அலுவலர் திமோதி பின்னோவ், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது, அவர் பேசுகையில், ''செயற்கை நுண்ணறிவு போன்றவற்றின் வாயிலாக, கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒழுக்கமான பயிற்றுவிப்பு, பயிலும் முறை, பாடத்திட்டம் என, ஒழுக்கமான கல்வி முறைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்,'' என்றார்.
எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை பேசுகையில்,''காடுகள் அழிப்பு உள்ளிட்ட காரணங்களால் பருவநிலை மாற்றம், பனிக்கட்டிகள் உருகி கடல்நீர் மட்டம் உயருதல் போன்ற பாதிப்புகளை சந்திக்கிறோம். சுற்றுச்சூழலை பாதுகாக்க 'கார்பன்' அதிகரிப்பை குறைக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, போலன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் ஸ்ரீகாந்த் போலா உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் தெரிவித்தனர். எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மோகன்தாஸ், நிர்வாக இயக்குனர் ஸ்ரீஷா உட்பட பலர் பங்கேற்றனர்.