/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களை இடிப்பதாக பதிவிட்டவர் மீது வழக்கு
/
கோவில்களை இடிப்பதாக பதிவிட்டவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 17, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;'கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே, கோவிலை விட்டு வெளியேறு' என, சமூக வலைதளத்தில் பதிவிட்ட இ.மு., நிர்வாகி மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கோவை மாவட்ட இந்து முன்னணி பொது செயலாளராக இருப்பவர் ஜெய்சங்கர்.
இவர் தனது முகநுால் பக்கத்தில், 'தமிழகம் எங்கும் கோவில் இடிப்பு. இந்துக்கள் கொந்தளிப்பு. கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே கோவிலை விட்டு வெளியேறு' என்ற வாசகங்களுடன், வரும், 21ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் என பதிவிட்டுள்ளார்.
இது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கூறி, வெரைட்டிஹால் ரோடு போலீசார் தாமாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.