/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு புகுந்து தாக்கிய பெண்கள் மீது வழக்கு
/
வீடு புகுந்து தாக்கிய பெண்கள் மீது வழக்கு
ADDED : மார் 01, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை குனியமுத்தூர், எம்.எஸ். கார்டன், ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ரம்லத் நிஷா, 43. அருகே வசிப்பவர்கள் ருக்கியா, ரிஹானா, ரிபானா மற்றும் ரிஜ்வானா. இவர்களுக்கிடையே, பொது குழாயில் குடிநீர் பிடிப்பது மற்றும் தரகர் கமிஷன் பிரிப்பது தொடர்பாக, முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 22ல் நால்வரும், ரம்லத் நிஷாவின் வீட்டிற்கு வந்து, கமிஷன் தொகை கேட்டு தகராறு செய்தனர்.
அவரை கையாலும், வீடு துடைக்கும் தடியாலும் தாக்கி சென்றனர். ரம்லத் நிஷா புகாரில், குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.