ADDED : ஆக 04, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
வடவள்ளி: கோவையில் உள்ள நாராயணா இ –டெக்னோ பள்ளியில், புதியதாக அமைக்கப்பட்ட கேட்டலிஸ்ட் ஆய்வகத்தை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார்.
வடவள்ளியில் உள்ள நாராயணா இ– டெக்னோ பள்ளியில், மாணவர்களின் கல்வியோடு, அவர்களின் மன மற்றும் நற்பண்புகளை வளர்க்கவும், தன்னம்பிக்கை, சுய விழிப்புணர்வு, நேர்மறையான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை வளர்க்கும் வகையில், கேட்டலிஸ்ட் ஆய்வகம் அமைக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வகத்தை திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் நாராயணா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் சாரணி, எம்.எல்.ஏ., கனிமொழி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
