ADDED : ஆக 04, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
பிச்சனூர்: பிச்சனூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில், க.க.சாவடி போலீசார் நடத்திய சோதனையில், தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும், பரமக்குடியை சேர்ந்த பிரவீண்குமார் 500 கிராம் கஞ்சா, 750 கிராம் கஞ்சா சாக்லேட்கள் வைத்திருப்பது தெரிந்தது.
பறிமுதல் செய்த போலீசார், பிரவீண்குமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் மதுரையை சேர்ந்த கவின் என்பவரிடமிருந்து கஞ்சா, சாக்லேட்களை வாங்கி வந்து, கல்லூரி மாணவர்களுக்கு விற்பது தெரிந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
