sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாலைகளில் கால்நடைகள் 'குண்டக்க மண்டக்க!' உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது என்னாச்சு?

/

சாலைகளில் கால்நடைகள் 'குண்டக்க மண்டக்க!' உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது என்னாச்சு?

சாலைகளில் கால்நடைகள் 'குண்டக்க மண்டக்க!' உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது என்னாச்சு?

சாலைகளில் கால்நடைகள் 'குண்டக்க மண்டக்க!' உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது என்னாச்சு?


ADDED : ஜூன் 18, 2024 12:40 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியா விளக்குகள்


ஜி.என்.மில்ஸ், திருப்பதி நகரில், கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

- அனந்த சுப்பிரமணியன், ஜி.என்.மில்ஸ்.

சாக்கடை அடைப்பு


வெங்கிட்டாபுரம், ஆர்.கே.நாயுடு லேஅவுட் பகுதியில், பாதாள சாக்கடை கடந்த ஆறு மாதங்களாக சுத்தம் செய்யவில்லை. சாக்கடை கால்வாயில் மண், குப்பை நிரம்பி இருப்பதுடன், புதர் செடிகளும் வளர்ந்துள்ளன. பல இடங்களில் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம்வீசுகிறது.

- சரவணன், வெங்கிட்டாபுரம்.

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு


கோவைப்புதுார், 90வது வார்டு, சாந்தி ஆஷ்ரம் பகுதியில், மாடுகளை சாலையில் அவிழ்த்து விடுகின்றனர். நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதுதான் நிலைமை. இம்மாடுகள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகளும், முதியவர்களும் அச்சம் அடைகின்றனர்.

- பிரபாகரன், கோவைப்புதுார்.

குழாய் உடைப்பு


செல்வபுரம், ஏழாவது வார்டில், என்.எஸ்.கே. வீதியில், குடிநீர் குழாய் உடைந்து பெருமளவு தண்ணீர் வீணாகி வருகிறது. கவுன்சிலரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை. தொடர்ந்து வீணாகும் தண்ணீரால், இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

- வெங்கடேஷ், செல்வபுரம்.

குவியும் குப்பை


ராம்நகர், நேரு வீதியில், குப்பையை கொட்ட வேண்டாம் என்ற அறிவிப்பையும் மீறி, தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. வேலி அமைத்தும் சிலர் இரவு நேரங்களில் குப்பையை வீசிச்செல்கின்றனர். புகார் செய்தும் குப்பையை அகற்ற நடவடிக்கையில்லை.

- கவுரிநாத், ராம்நகர்.

சாக்கடை அடைப்பு


மணியகாரன்பாளையம், 19வது வார்டு, அன்னை தங்கம்மாள் நகர் மெயின் ரோட்டில், டி.என்.இ.பி., அலுவலகம் அருகில், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் அடைத்திருக்கும் குப்பையை சுத்தம் செய்ய வேண்டும். கழிவுநீர் தேக்கத்தால் இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

- சவுந்திரராஜன், மணியகாரன்பாளையம்.

வீணாகும் தண்ணீர்


காளப்பட்டி, 33வது வார்டு, மாகாளி அம்மன் கோவில் தெருவில், குடிநீர் குழாய் உடைந்து பெருமளவு தண்ணீர் சாலையில் வீணாகிறது. சாலையில் குளம் போல தேங்கியுள்ள நீரால், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த ஒரு மாதமாக புகார் செய்தும், குழாய் உடைப்பு சரிசெய்யவில்லை.

- கிருஷ்ணன், காளப்பட்டி.

வேகத்தடை வேண்டும்


காந்திபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ஐந்தாவது வீதியில், பள்ளி ஒன்று செயல்படுகிறது. பள்ளி அருகேவுள்ள சாலை சந்திப்பில், வேகமாக வரும் வாகனங்களால் பள்ளி குழந்தைகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். சின்ன சின்ன விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. வேகத்தடை வேண்டும்.

- கதிர்வேல், காந்திபுரம்.

பயணத்திற்கு ஆபத்து


பேரூர் பச்சாபாளையம், ஆவின் பால் கம்பெனி அருகில், சமீபத்தில் பெய்த கனமழையில் மரம் முறிந்து சாலையோரம் விழுந்தது. பல வாரங்கள் ஆகியும், சாலையோரம் குவிந்துள்ள காய்ந்த கிளைகள் அகற்றப்படாமல் உள்ளன. இரவு நேரங்களில், வாகனம் ஓட்டுபவர்களுக்கு இடையூறாக உள்ளது.

- நாகராஜ், பச்சாபாளையம்.

புகார் செய்தும் பலனில்லை


சிங்காநல்லுார், 55வது வார்டு, ஏ.ஆர்.எஸ்., மஹால் அருகே, குடிநீர் குழாய் உடைந்து அதிக தண்ணீர் தேங்குகிறது. மண் சாலையில் தண்ணீர் தேங்கி, சேறும், சகதியுமாக உள்ளது. கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வீணாவது குறித்து புகார் செய்தும் நடவடிக்கையில்லை.

- ராபர்ட், சிங்காநல்லுார்.

பன்றிகளால் தொல்லை


காளப்பட்டி, ஆறாவது வார்டு, ஆதர்ஷ் கார்டனில், கூட்டம் கூட்டமாக பன்றிகள் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அருகிலுள்ள குட்டையில் சிலர் குப்பையை, கட்டடக்கழிவுகளை கொட்டிச்செல்வதே இதற்கு காரணம்.

- ராஜமுருகன், காளப்பட்டி.

நோய் பரவும் அபாயம்


நீலிக்கோணம்பாளையம், பழைய போஸ்ட் ஆபீஸ் எதிரில், 59வது வார்டில், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு மேலாகியும், கழிவுகள் அகற்றப்படவில்லை. அருகிலுள்ள, குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.

- சேகர், 59வது வார்டு.






      Dinamalar
      Follow us