/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பையில் உணவு தேடும் கால்நடைகள்; நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்
/
குப்பையில் உணவு தேடும் கால்நடைகள்; நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்
குப்பையில் உணவு தேடும் கால்நடைகள்; நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்
குப்பையில் உணவு தேடும் கால்நடைகள்; நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்
ADDED : செப் 12, 2024 09:17 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், ரோட்டோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளில் உணவு தேட கால்நடைகள் வருவதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சி உட்பட்ட பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுவதால், திறந்தவெளியில் குப்பை கொட்ட தடையுள்ளது. மாறாக, துாய்மைப் பணியாளர்கள், வீடுகள் மற்றும் வணிகக் கடைகளுக்கு நேரடியாகச் சென்று, குப்பை சேகரம் செய்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு இருந்தும், பல வார்டுகளில், ரோட்டோரத்தில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. சமூக அக்கறை இல்லாத குடியிருப்புவாசிகள், வீடுகளில் சேகரமாகும் கழிவுகளை, பாலித்தீன் பைகளில் நிரப்பி, திறந்தவெளியில் வீசிச் செல்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, விதிமீறி நகரில் மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிடப்படும் கால்நடைகள், ரோட்டோரத்தில் குவிந்து கிடக்கும் கழிவுகளில், உணவு தேடுகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்தும் நேரிடுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சியில், ரோட்டோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள், முறையாக அகற்றப்படுவதில்லை. அதேநேரம், குப்பைக்கழிவுகளில் இருக்கும் காய்கறிக் கழிவுகளை கால்நடைகள் உணவாக உட்கொள்கின்றன.
அப்போது, பாலித்தீன் பைகளையும் உட்கொள்ள நேரிடுகிறது. குடல்அழற்சி நோய் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும், கால்நடைகள் ரோட்டில் தாறுமாறாக செல்வதால், வாகனங்களில் செல்வோர் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
குப்பையை அகற்றவும், திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க, குடியிருப்புவாசிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.