ADDED : செப் 04, 2024 11:21 PM

பொள்ளாச்சி : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால், கடந்த 2014ல், செப்., 2ல், உலக கடிதம் தினம் கொண்டு வரப்பட்டது. கைகளால் கடிதம் எழுதுவது சிறந்த அனுபவமாக அமையும் என்பதே அவரின் ஆழமான கருத்தாகும்.
காலத்தின் பொக்கிஷமான இந்த கடிதம் குறித்து எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில், இன்றும் ஆங்காங்கே கடிதம் எழுதும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அவ்வகையில், பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி செண்பம் மெட்ரிக் பள்ளியில், உலக கடித தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் கவிஞர் பூபாலன் கிருஷ்ணமூர்த்தி, 'கடித இலக்கியமும் புத்தகம் வாசித்தலும்' என்ற தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து, மாணவர்கள் ஒன்றிணைந்து, கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் தன்னலம் கருதாமல் சேவை புரிந்த ராணுவ வீரர்களுக்கு, கடிதம் வாயிலாக வாழ்த்து மற்றும் நன்றியை தெரிவித்தனர்.