/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக செவிலியர் தினம் கொண்டாட்டம் ;அரசு மருத்துவமனையில் உறுதிமொழி
/
உலக செவிலியர் தினம் கொண்டாட்டம் ;அரசு மருத்துவமனையில் உறுதிமொழி
உலக செவிலியர் தினம் கொண்டாட்டம் ;அரசு மருத்துவமனையில் உறுதிமொழி
உலக செவிலியர் தினம் கொண்டாட்டம் ;அரசு மருத்துவமனையில் உறுதிமொழி
ADDED : மே 12, 2024 11:29 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில், உலக செவிலியர் தினம் அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. நேதாஜி சுபாஷ் இளைஞர் பேரவை தலைவர் நடராஜ் தலைமை வகித்தார்.
மருத்துவமனை டாக்டர்கள் சரவணகுமார், ஜோதி கலா, மணிமேகலை, கார்த்திக்கேயன் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர் கவுரி வரவேற்றார்.
தொடர்ந்து செவிலியர்கள், 'எனது சக்திக்கு உட்பட்டு எனது செவிலிய பணியின் தரத்தை நிலைக்க செய்யவும், அதன் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் நான் பாடுபடுவேன்.
நான் பணியில் இருக்கும் போது, எனக்கு தெரிய வருகிற நோயாளர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட செய்தியின் ரகசியத்தை காப்பேன்.
எனது முழு மனதுடன் மருத்துவர், நோயாளிக்கு செய்யும் பணிகளில் அவருக்கு உதவியாக இருப்பதுடன், என்னிடம் ஒப்பபடைக்கப்பட்ட நோயாளியின் நலனுக்காக நான் பாடுபடுவேன்.எனக்கோ, எனது செவிலிய பெயருக்கோ, களங்கம் விளைவிக்கும் அனைத்து செயல்களில் இருந்தும் நான் விலகி இருப்பேன். நோயாளிகளுக்கு எந்த விதமான கெடுதலையும், விளைவிக்க கூடிய மருந்தினை கொடுக்கவோ அல்லது நான் எடுக்கவோ மாட்டேன்.
நான் இந்த அவையில் இறைவன் முன்னிலையில், எனது வாழ்க்கையை துாய்மையாகவும், எனது தொழிலை அர்ப்பணிப்புடனும் நடத்தி செயல்படுவேன் என உறுதி எடுக்கிறேன்,' எனக்கூறி உறுதிமொழியெடுத்தனர்.
தொடர்ந்து செவிலியர்கள் கவுரவிக்கப்பட்டனர். கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர் பொன்னீஸ்வரி, செவிலியர்கள், நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் முருகானந்தம், சுப்ரமணியன், குப்புசாமி, கவுன்சிலர் சாந்தலிங்கம் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர். நேதாஜி இளைஞர் பேரவை செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.