தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


ADDED : ஜூன் 10, 2024 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2024 01:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்;இந்தியாவின் பிரதமராக மோடி மூன்றாம் முறை பதவி ஏற்றதை பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கூடலூர் நகராட்சி மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ., வடக்கு மாவட்ட பொது செயலாளர் சுபாஷ் தலைமை வகித்தார்.

பெரியநாயக்கன்பாளையம் மண்டல தலைவர் மகேந்திரராஜ், கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தனர். விழாவை ஒட்டி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பட்டாசு வெடித்தும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில், திரளான பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சூலூர் கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ரவிக்குமார் தலைமையில் திரண்ட தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அசோக், நந்தகோபால், ரவி, மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

காங்கயம்பாளையத்தில் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஊராட்சி துணைத்தலைவர் மகேஸ்வரி, சரவணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கருமத்தம்பட்டி பகுதியில் பா.ஜ., நிர்வாகிகள் திரண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

மண்டல தலைவர்கள் மகேஷ், மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us