sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிலோன் காலனி பொதுமக்களுக்கு சிக்கல் :எம்.ஜி.ஆர்.நகர் முதல் வீதியில் காத்திருக்கு பள்ளம்

/

சிலோன் காலனி பொதுமக்களுக்கு சிக்கல் :எம்.ஜி.ஆர்.நகர் முதல் வீதியில் காத்திருக்கு பள்ளம்

சிலோன் காலனி பொதுமக்களுக்கு சிக்கல் :எம்.ஜி.ஆர்.நகர் முதல் வீதியில் காத்திருக்கு பள்ளம்

சிலோன் காலனி பொதுமக்களுக்கு சிக்கல் :எம்.ஜி.ஆர்.நகர் முதல் வீதியில் காத்திருக்கு பள்ளம்


ADDED : ஆக 11, 2024 10:52 PM

Google News

ADDED : ஆக 11, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. விடிந்தாலே விபத்துதான்


போத்தனுார், 98வது வார்டு, சிலோன் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், முதலாவது வீதியில், பாதாள சாக்கடையை சுற்றிலும் சாலை சேதமடைந்து, குழியாக உள்ளது. கடந்த ஏழு மாதங்களாக, கவுன்சிலர் உள்பட அதிகாரிகளிடம், புகார் செய்தும் நடவடிக்கையில்லை. சைக்கிளில் செல்லும் குழந்தைகள், பைக்கில் செல்வோர் கீழே விழுகின்றனர்.

- பொதுமக்கள், எம்.ஜி.ஆர்.,நகர்.

2. வீணாகும் குடிநீர்


சிங்காநல்லுார் பேருந்து நிலையம் அருகே, கோத்தாரி மில் லைன் பகுதியில், குழாய் உடைந்து பெருமளவு தண்ணீர் வீணாகிறது. கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக, தண்ணீர் வீணாவது குறித்து புகார் செய்தும் நடவடிக்கையில்லை.

- மேனகா, ஆர்.எஸ்.புரம்.

3. புதர்மண்டிய சாக்கடை


கோவை மாநகராட்சி, 54வது வார்டு, காமராஜர் மெயின் ரோடு, கஸ்துாரிபாய் மருத்துவமனை எதிரே, பேங்க் ஆப் பரோடா அருகே, சாக்கடை புதர்மண்டி காணப்படுகிறது. கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் கவர், குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

- குமார், 54வது வார்டு.

4. குட்டி குப்பைக்கிடங்கு


ராம்நகர், தியாகராய புதுவீதி 2ல், கைவிடப்பட்ட வீடு ஒன்று உள்ளது. அருகில் வசிப்போர் அந்த வீட்டில் தொடர்ந்து, குப்பையை கொட்டி வருகின்றனர். குட்டி குப்பை கிடங்காய், இந்த வீடு மாறி வருகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.

- சரவணக்குமார், ராம்நகர்.

5. தெருவிளக்கு பழுது


ஆவாரம்பாளையம், ராமசாமி லே-அவுட்டில், 28வது வார்டில், 'எஸ்.பி-49 பி-12' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த பத்து நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவில் நடமாடவே பாதுகாப்பற்ற சூழல் நிலவுதால், விரைந்து பழுதை சரிசெய்ய வேண்டும்.

- ராஜா, ஆவாரம்பாளையம்.

6. மிரட்டும் நாய்கள்


தொண்டாமுத்துார், ராமசாமி நகரில், தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் பத்துக்கு மேற்பட்டவை சாலையில் சுற்றித்திரிகின்றன. சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துகின்றன. நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களை விரட்டுகின்றன.

- தீபக், தொண்டாமுத்துார்.

7. பல்லாங்குழிகளான சாலை


கணுவாய், 6வது வார்டு, வி.எம்.டி.நகர், கொங்கு நகரில், கடந்த மூன்று வருடமாக சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. பெரிய, பெரிய பள்ளங்களாக இருக்கும் சாலையில், வாகனங்களை இயக்கவே முடியவில்லை. வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

- கோகுல், கணுவாய்.

8. விபத்திற்கு வாய்ப்பு


துடியலுார் ரயில்வே கேட் அருகில், ஓட்டுனர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், தனியார் கட்டடத்தில் பெரிய விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளதால், பதாகையை உடனடியாக அகற்ற வேண்டும்.

- ராஜா, வெள்ளக்கிணறு.

9. இருளால் பாதுகாப்பில்லை


பி.என்.புதுார், 74வது வார்டு, கோகுலம் காலனி, நான்காவது வீதியில், 'எஸ்.பி-5, பி-6' என்ற எண் கொண்ட கம்பத்தில், ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள் உள்ளிட்டோர், அச்சத்துடன் வருகின்றனர். சமூக குற்றங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

- மணிகண்டன், புதுார்.

10. எரியா விளக்குகள்


வடவள்ளி, தொண்டாமுத்துார் ரோடு, சின்மயா வித்யாலயா அருகே, வள்ளலார் நகரில், முதல் தெருவில் தெருவிளக்கு எரியவே இல்லை. கம்பத்தில் விளக்கு சாலையை நோக்கியின்றி, காலியிடத்தை நோக்கி திருப்பி வைக்கப்பட்டுள்ளது.

- வெங்கடேசன், வடவள்ளி.

11. கடும் துர்நாற்றம்


கோணவாய்க்கால்பாளையம், 85வது வார்டு, சுப்பராய முதலியார் வீதியில், பல நாட்களாக சாக்கடை துார்வாரவில்லை. பல இடங்களில் சாக்கடை அடைத்து, கடும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கியுள்ள நீரில் கொசுப்புழுக்களின் உற்பத்தியும், அதிகளவில் உள்ளது.

- முத்துகுமார், சுப்பராய முதலியார் வீதி.

போக்குவரத்து நெருக்கடி


பாலக்காடு ரோடு, மரப்பாலம் ரயில்வே சுரங்கப்பாதையில் தினமும் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஒரு வழிப்பாதையை, இரு வழியாக விரிவாக்கம் செய்ய வேண்டும். அதுவரை போக்குவரத்து காவலர்கள் காலை, மாலை வேளையில் வாகன போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும்.

- அருண், மதுக்கரை.






      Dinamalar
      Follow us