ADDED : மே 28, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்;அன்னுார் ஜீவா நகரை சேர்ந்தவர் தனலட்சுமி, 49; மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 24ம் தேதி, கடை முன் நின்றபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், அவரது கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் செயினை பறித்து சென்றார்.
அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில், தனலட்சுமி புகார் அளித்தார். தங்க செயினை பறித்தது, கோவையை சேர்ந்த பிலிப் மேத்யூ, 23, என, விசாரணையில் தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் நேற்று காலை குன்னத்தூர் அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பிலிப் மேத்யூவை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 சவரன் தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.