/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சவால்களை எதிர்கொள்ள தனிமனித அறம் தேவை!
/
சவால்களை எதிர்கொள்ள தனிமனித அறம் தேவை!
ADDED : ஆக 17, 2024 12:31 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம் சார்பில் 'சுதந்திர இந்தியாவின் சவால்கள்' என்ற தலைப்பில் கூட்டம், லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. கவிஞர் ரமேஷ் வரவேற்றார். பொள்ளாச்சி இலக்கிய வட்டத் தலைவர் அம்சபிரியா தலைமை வகித்தார்.
முன்னதாக, கோகுலகிருஷ்ணன் மற்றும் சஞ்சய் ராஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சி, மண்ணுார் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பேச்சு, பாட்டு, கவிதை ஆகிய பிரிவுகளில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆன்மிக பேச்சாளர் விஜயகுமார் பேசுகையில், ''சுதந்திர இந்தியாவின் சவால்களை எதிர்கொள்ள தனிமனித அறமே அடிப்படைத் தேவை. அந்த உணர்வு இன்றைய இளைஞர்களைச் சென்றடையச் செய்வது அனைவரின் கடமை,'' என்றார்.
இந்திய ராணுவ முன்னாள் அதிகாரிகள் அறவொளி, பொன்துரைசாமி, முருகன் -ஆகியோர் கலந்து கொண்டனர். மன்றத் தலைவர் சண்முகம், செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

