/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாவட்டத்தில் சாரல் மழைக்கு வாய்ப்பு
/
கோவை மாவட்டத்தில் சாரல் மழைக்கு வாய்ப்பு
ADDED : மார் 07, 2025 08:25 PM
பொள்ளாச்சி:
நிலக்கடலை மகசூலை அதிகரிக்க, செடிகளின் மீது காலி டிரம்மை உருட்டும்படி, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் ஆலோசனை வழங்கியுள்ளது.
கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கடந்த வாரம் தமிழகத்தில், அதிகபட்சம், 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. நாளை வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவும்; கோவை மாவட்டத்தில் லேசான சாரல் மழை பெய்யக்கூடும். நிலக்கடலையைப் பொறுத்தவரை 45 முதல் 50 நாட்களாக பயிர்கள் மீது காலி டிரம்மை உருட்டினால், மகசூல் அதிகரிக்கும். கோடை மழை காரணமாக, வேர் அழுகல் நோய் வரலாம் என்பதால், உரிய மருந்து தெளிக்கவும்.
மா, தென்னை மரங்களுக்கு உள்நோக்கிய பாத்தி அமைத்து, ஈரப்பதத்தைத் தக்க வைக்க, மூடாக்கு அமைக்கலாம். ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பொறியைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.