/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் மாற்றம்
/
கோவை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் மாற்றம்
ADDED : ஆக 02, 2024 12:06 AM
கோவை:கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக இருந்த, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை அரசு செயலர் ஜெயஸ்ரீ, சென்னைக்கு மாற்றப்பட்டார்.
கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக இருந்தவர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை அரசு செயலர் ஜெயஸ்ரீ. இவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் கோவை வந்து, வளர்ச்சி பணிகள் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்வார். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று, அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை நேரில் ஆய்வு செய்து, அலுவலர்களிடம் கேட்டறிவார். பின், துறை தலைவர்களுக்கு அறிவுரை வழங்கிச் செல்வார்.
கடந்த, 31ம் தேதி வால்பாறைக்கு சென்ற அவர், பன்னிமேடு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்த பகுதிக்குச் சென்று, குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், அவர், சென்னை மாவட்டத்துக்கு கண்காணிப்பு அலுவலராக மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக, மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளர் நந்தகுமார், கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.