/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்பு பயிற்சி முகாம் ஏராளமானோர் பங்கேற்பு
/
பண்பு பயிற்சி முகாம் ஏராளமானோர் பங்கேற்பு
ADDED : மே 20, 2024 10:55 PM
சூலூர்:மாணவர்களுக்கு உடல் மற்றும் மன வலிமை அதிகரிக்க, நடந்த பயிற்சி முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கீதா பஜன் அறக்கட்டளை சார்பில், பெரிய குயிலி கீதாபஜன் ஆஞ்ச நேயர் கோவிலில், ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் நடந்தது. காலை, 9:30 மணி முதல், மாலை, 5:30 வரை நடந்த பயிற்சியில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உடலுக்கும், மனதுக்கும் வலிமை தரும், யோகா, விளையாட்டுகள் மற்றும் தலைமை பண்பு, நினைவாற்றல், தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கப்பட்டது.
அறிவாற்றல், பாடங்களை எளிதாக படிக்கும் பயிற்சியும் வழங்கப்பட்டது. சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று பயிற்சி எடுத்துக்கொண்டனர்.

