ADDED : மார் 06, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர் அலங்காரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற 12ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு தேரை சுற்றி வைக்கப்படும், மூங்கில் தடுப்புகள், புதிய மூங்கில்களால் கட்டப்பட்டுள்ளன. அந்த தடுப்புகளுக்கு வண்ண பேப்பர்களால், அலங்காரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இப்பணிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.