/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீதாராம ஆஞ்சநேயர் கோவிலில் தேரோட்டம்
/
சீதாராம ஆஞ்சநேயர் கோவிலில் தேரோட்டம்
ADDED : ஏப் 16, 2024 11:14 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சத்திரம் வீதி சீதாராம ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடக்கிறது.
பொள்ளாச்சி சத்திரம் வீதி சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவில், ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மிருத்திகா பிருந்தாவனத்தில், ராம நவமி ரதோற்சவ விழா, கடந்த, 9ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இன்று, ராமநவமியை முன்னிட்டு தேரோட்டம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு மேல், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சீதா ராமர் தேரில் எழுந்தருளல் மற்றும் காலை, 11:15 மணிக்கு தேர் புறப்பாடு திருவீதி உலா, இரவு, 8:00 மணிக்கு திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், இரவு, 9:00 மணிக்கு குதிரை வாகனம் புறப்பாடு நடக்கிறது.
நாளை, காலை, 8:30 மணிக்கு அவபிருத ஸ்நானம், இரவு, 8:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பாடு திருவீதி உலா நடக்கிறது. வரும், 19ம் தேதி ஏகாதசி சகஸ்ர சங்கா அபிேஷகம், 20ம் தேதி மஹா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. ராமநவமி சிறப்பு வழிபாடு மற்றும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

